பார்த்திபனின் உதவி இயக்குநரை மணந்த ‘பிக்பாஸ்’ விக்ரமன்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் கவனம் பெற்ற விக்ரமனுக்கும், உதவி இயக்குநரான ப்ரீத்தி கரிகாலனுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது.

சென்னை,

சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம் வந்த விக்ரமன், தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பான நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும் என்ற கிரைம் தொடரை தொகுத்து வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணைந்த விக்ரமன், அக்கட்சியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக மாறினார். இதையடுத்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 6 இல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்து. இதில் ரன்னர் பட்டத்தை வென்று சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

இந்நிலையில் அவர் 'கோடிட்ட இடங்களை நிரப்புக', 'கதை திரைக்கதை வசனம்' ஆகிய படங்களில் இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக இருந்த ப்ரீத்தி கரிகாலன் என்பவரை கரம் பிடித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் அறிமுகமான நிலையில், காதல் ஏற்பட்டு தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவர்களின் திருமணம் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்து மத முறைப்படி தாலி கட்டியும், கிறிஸ்துவ முறைப்படி மோதிரமும் மாற்றிக்கொண்டனர்.

இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை விக்ரமன் தனது எக்ஸ் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

அன்பும் அறனும் 🙂 pic.twitter.com/Y1qe4xsrM1

— Vikraman R (@RVikraman) November 5, 2024

இதில் இரு தரப்பினரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

Related posts

புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

ஏவுகணை பரிசோதனை: வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!

ஜார்க்கண்ட்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சத்துக்கான காப்பீடு -இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை