பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதமா? காவல் துறை மறுப்பு!

சென்னையில் பாலங்கள் மீது நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் என்ற தகவலுக்கு காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

பாலங்கள் மீது நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாலங்கள் மீது கார்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

எனினும் கார்களின் விலை மற்றும் சேத மதிப்பீடுகளை ஒப்பிடுகையில் அபராதத்திற்கு அஞ்சாமல் கார்களை எடுக்க மறுப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் பாலங்கள் மீது நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் என்ற தகவலுக்கு காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மழைக்காலத்தில் மக்களுக்கு உதவ கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அருகே வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்த வேண்டும் என்றும்

அருகில் உள்ள வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிய மக்களுக்கு காவல் துறை உதவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பே எங்களின் முதன்மை முன்னுரிமை என்றும் பொதுமக்கள் உதவிக்கு 9498181500 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் காவல் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது