பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் இந்தியா 129வது இடத்தைப் பிடித்துள்ளது.

பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம், அரசியல் பங்களிப்பு ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில், உலகப் பொருளாதார அமைப்பு பாலின சமத்துவத்தை மதிப்பீடு செய்து ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 146 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில், இந்தியாவுக்கு 129-ஆவது இடம் கிடைத்துள்ளது. எந்த நாட்டிலும் 100 சதவிகித பாலின சமத்துவம் இல்லை என உலகப் பொருளாதார அமைப்பு கூறியுள்ளது.

எனினும், இந்தப் பட்டியலில் ஐஸ்லாந்து முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக பின்லாந்து, நாா்வே, நியூசிலாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளில் பாலின ஏற்றத்தாழ்வு மிகக் குறைவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
மத்திய அரசின் மாதம் ரூ.35,000 வழங்கும் திட்டம்… இந்த தகுதி இருந்தாலே போதும்!

கடந்த ஆண்டு 127-வது இடத்தை பிடித்த இந்தியா, இரண்டு இடங்கள் சரிந்து 129-ஆவது இடத்தை பிடித்துள்ளது. பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, பூடான் நாடுகள் பாலின சமத்துவத்தில் இந்தியாவை விட அதிக புள்ளிகளை பெற்றுள்ளன.

பாகிஸ்தான் மூன்று இடங்கள் சரிந்து 145வது இடத்திலும், சூடான் கடைசி இடத்திலும் உள்ளன. ஆண், பெண் சமத்துவ பாலின நிலையை முழுமையாக எட்ட இன்னும் 134 ஆண்டுகள் அதாவது 5 தலைமுறைகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Gender equality
,
Gender Inequality

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?