பாலியல் குற்றங்களைத் தடுக்க அபராஜிதா! மேற்கு வங்க பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா மேற்கு வங்க பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும் வகையில், அபராஜிதா மகளிர் மற்றும் குழந்தைகள் சட்ட மசோதா -2024 (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்) கொண்டு வரப்பட்டுள்ளது. இது மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் இறந்தால் அல்லது நினைவிழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை மேற்கு வங்க சட்டப்பேரவையில் மாநில முதல்வர் மமதா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார்.

முன்னதாக, பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும். அந்தச் சட்டத்திருத்தம் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும். இந்தச் சட்டத்திருத்தத்துக்கு மாநில ஆளுநா் ஒப்புதல் அளிக்காவிட்டால் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் ஆளுநா் மாளிகை எதிரே நான் தா்னா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று எச்சரித்திருந்தார். இந்த நிலையில்தான் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

முதல்வர் மமதா தக்கல் செய்த மசோதாவுக்கு மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

90% பேரால் பதில் சொல்ல முடியாத ஹார்வர்டு பல்கலை.யின் கேள்வி!

மசோதாவை தாக்கல் செய்து பேசிய மமதா பானர்ஜி, பாலியல் பலாத்கார தடுப்பு மசோதா, விரைவான விசாரணை, விரைவான நீதி மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும், சிறப்பு அபராஜிதா அதிரடிப் படை உருவாக்கப்பட்டு, விசாரணையை முடிப்பதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்படும் என்று மமதா கூறியுள்ளார்.

மேலும், இந்த மசோதா மூலம், குற்றவாளிகள் தப்பிச் செல்ல சட்டங்களில் இருக்கும் ஓட்டைகள் மூடப்பட்டுள்ளன என்றும், பெண் மருத்துவருக்காகக் குரல் கொடுத்த ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுதல்களை நான் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: சட்டத் திருத்தம் கொண்டு வர மம்தா உறுதி

மேலும், பாலியல் பலாத்காரம் என்பது மனிதநேயத்துக்கு எதிரான சாபம். இதுபோன்ற குற்றச்செயல்களைத் தடுக்க சமூக மாற்றம் தேவை என்றார்.

இந்த சட்ட மசோதாவில் கையெழுத்திடும்படி, எதிர்க்கட்சியினர், மாநில ஆளுநரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும், இது நமது கடமை, சிபிஐயிடம் இருந்து நியாயம் கிடைக்க வேண்டும், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் மமதா வலியுறுத்தினார்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!