திருவனந்தபுரம்,
கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து அண்மையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நடிகர், இயக்குனர் மற்றும் கேரள மாநில சலசித்ரா அகாடமி தலைவருமான ரஞ்சித் பாலியல் முறைகேடு புகார்களில் சிக்கியதை அடுத்து, நடிகர் சித்திக் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
கேரளாவின் நட்சத்திர அமைப்பான அம்மாவின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகையும், மாடலுமான ரேவதி சம்பத் பாலியல் புகாரை வைத்தார். இதையடுத்து பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) பொதுச்செயலாளர் பதவியை நடிகர் சித்திக் ராஜினாமா செய்தார்.
தன் மீதான பாலியல் வன்கொடுமை புகார்கள் வலுப்பெற்றதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை ரேவதி சம்பத் அளித்த பாலியல் புகாரின் பேரில் கேரள போலீசார் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
#BREAKING || பாலியல் புகார் – நடிகர் சித்திக் மீது வழக்கு
கேரளாவில் இளம் நடிகை புகாரின் பேரில் நடிகர் சித்திக் மீது வழக்கு பதிவு
பாலியல் பலாத்காரம் மற்றும் மிரட்டல் விடுத்ததாக திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு#BreakingNews#Kerala#IndianActor… pic.twitter.com/7wBErKmV35— Thanthi TV (@ThanthiTV) August 28, 2024