பாலியல் புகார்: மலையாளப் பட இயக்குநர் வி.கே. பிரகாஷுக்கு ஜாமீன்!

பாலியல் புகாருக்குள்ளான மலையாளத் திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷ் ஜாமீனில் இன்று (செப். 19) விடுவிக்கப்பட்டார்.

ஜாமீனில் விடுவிப்பதற்கு முன்பு இரு நாள்களுக்கு பிரகாஷிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என காவல் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

பள்ளித்தோட்டம் காவல் துறையினர் கைது செய்து மூன்று நாள்களாக விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கதை சொல்லும்போது பாலியல் கொடுமை

திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷ் மீது பெண் திரைக்கதை எழுத்தாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு தான் எழுதிவைத்திருந்த கதையை வி.கே. பிரகாஷிடம் கூறச் சென்றபோது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் எழுத்தாளர் புகாரில் தெரிவித்துள்ளார்.

கேரள திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக நீதிபதி ஹேமா குழு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல் துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரலாம் என்றும், புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநில அரசு தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து மலையாளத் திரைத் துறையில் பல்வேறு பிரலங்கள் மீது பாலியல் புகார் எழுந்தது.

புகாருக்குள்ளான பிரபலங்கள்

கேரள மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் நடிகா் சித்திக் ஆகியோா் மீது பாலியல் புகார் எழுந்தது. இதனையடுத்து தங்கள் பதவிகளை அவர்கள் ராஜிநாமா செய்தனர்.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த நடிகையொருவா் அளித்த புகாரில் கேரள இயக்குநா் ரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நடிகரும், ஆளும் சிபிஐ(எம்) எம்எல்ஏவுமான முகேஷ், ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு, நிவின் பாலி ஆகியோா் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டது.

அந்தவகையில் திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷ் மீது பெண் எழுத்தாளர் பாலியல் புகார் அளித்தார். பள்ளித்தோட்டம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கில் இயக்குநர் பிரகாஷ் முன்ஜாமீன் பெற்றிருந்தார். எனினும், காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மூன்று நாள்களுக்கு விசாரணை நடத்திய பிறகு அவரை விடுதலை செய்யலாம் என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன்படி மூன்றாவது நாள் விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவின்படி வி.கே. பிரகாஷ் ஜாமீனில் இன்று விடுவிக்கப்பட்டார்.

பக்கத்து வீட்டில் துர்நாற்றம்! காவல்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

குற்றச்சாட்டு மறுப்பு

பெண் எழுத்தாளரின் பாலியல் குற்றச்சாட்டை இயக்குநர் வி.கே. பிரகாஷ் மறுத்துள்ளார். அப்பெண் தனது நண்பர்களையும் பாலியல் புகார் விவகாரத்தில் மிரட்டியுள்ளதாகவும் பிரகாஷ் குற்றம் சாட்டினார். மேலும், பாலியல் இச்சைகளைத் தூண்டும் வகையிலான குறுஞ்செய்திகளை வாட்ஸ்ஆப்பில் அனுப்பியதாகவும் வி.கே. பிரகாஷ் தெரிவித்தார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்