பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு தூக்கு தண்டனை – மேற்குவங்கத்தில் மசோதா

பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு தூக்கு தண்டனை – மேற்கு வங்க பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

மம்தா பானர்ஜி

பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு தூக்கு தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்ற பெண் பயிற்சி மருத்துவர், கடந்த 9ஆம் தேதி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், பாலியல் குற்றங்களுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையில் 2024 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்பட்டது.

விளம்பரம்

இந்த மசோதாவின் பேரில் விவாதங்கள் நடந்த பின்பு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பெண்கள் பாதுகாப்பு மசோதாவை பிரதமரால் நிறைவேற்றவே முடியாது என்று ஆவேசமாக குரல் எழுப்பினார். இந்த மசோதாவின் மூலம் முதற்கட்ட அறிக்கையை காவல்துறை வழங்கியபின்பு 21 நாட்களில் தண்டனை வழங்கப்படும் எனவும், பெண்கள் பாதுகாப்பு சிறப்புப் படை உருவாக்கப்படும் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொல்கத்தா RG Kar மருத்துவமனை முன்னாள் முதல்வர் கைது.. சிபிஐ சொன்ன காரணம் இதுதான்!விளம்பரம்

பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பாதுகாப்புக்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Mamata Banerjee

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!