பாலைவன விலங்கை அசால்டாக தூக்கி சென்ற மர்ம நபர்கள்.!!

Local 18 – பாலைவன விலங்கை அசால்டாக தூக்கி சென்ற மர்ம நபர்கள்.!! தகவல் கொடுப்போருக்கு தகுந்த சன்மானம் அறிவித்த ஓனர்

ஒட்டகம்

பொதுவாக திருடர்கள் பர்ஸ் திருடுவதை பல ஆண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம். அபப்டி இல்லை என்றால் வீட்டை உடைத்து தங்கம் அல்லது பணம் கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களை பற்றி அடிக்கடி கேள்விபட்டிருப்போம்.

ஆனால் ஆந்திர மாநிலத்தில் மிக பெரிய விலங்கு ஒன்று திருடு போயிருக்கிறது. அதை பற்றி இங்கே பார்க்கலாம். ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி நகருக்கு அருகில் உள்ள குரபாலகோடா (Kurabalakota) மண்டலம் அங்கல்லு கிராமத்தில் ஒட்டகம் ஒன்று திருடு போனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விளம்பரம்

இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அங்கல்லா பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் சில நாட்களுக்கு முன்பு ரூ.1.25 லட்சம் செலவு செய்து ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த நணபர்கள் அந்த ஒட்டகத்தை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேய்த்து விட்டு இரவு நேரம் வந்ததும் வீட்டில் கட்டி வைத்து வந்தனர். இந்த வழக்கம் தொடர்ந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அதிகாலையில் எழுந்த பார்த்த போது பாலைவன விலங்கான அந்த ஒட்டகத்தை காணவில்லை. முதலில் ஒட்டகத்தை கட்டி இருந்த கயிறு அறுந்து தானாகவே வெளியேறி சென்றிருக்கும் என்றே அந்த நண்பர்கள் நினைத்தனர்.

விளம்பரம்

இதனை தொடர்ந்து அருகிலுள்ள ஆறுகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் என அக்கம் பக்கம் முழுவதும் தங்கள் ஒட்டகத்தை தேடி அந்த நண்பர்கள் அலைந்தனர். ஆனால் எவ்வளவு தேடியும் அந்த ஒட்டகம் கிடைக்கவில்லை.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 சூப்பர் விதைகள்.!
மேலும் செய்திகள்…

ஒட்டகம் காணாமல் போன அன்று காலை முதல் இரவு வரையிலும் நண்பர்கள் எல்லா இடங்களிலும் அதனை தேடி சுற்றித் திரிந்தனர். அருகில் உள்ள பள்ளங்கள், சிற்றோடைகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகள் என ஓரிடம் கூட விடாமல் சல்லடை போட்டு தேடினர். ஆனால் இறுதி வரை ஒட்டகம் அவர்கள் கண்களில் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும் ஒட்டகம் இருந்ததற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை.

விளம்பரம்

எனவே அடையாளம் தெரியாத சில விலங்குகளை கடத்தும் கும்பல் ஒட்டகத்தை திருடியிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். ஒட்டகத்தின் உரிமையாளரான உசேன் மதனப்பள்ளி ரூரல் சர்க்கிள் போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து பெங்களூரு, அனந்தப்பூர், திருப்பதி செல்லும் நெடுஞ்சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனாலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அங்கல்லு அருகே உள்ள கனசானிவாரிப்பள்ளியிலிருந்து மதனப்பள்ளி வரை புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலை பகுதியில் ஒட்டகம் ஒன்றின் தோலை உரித்ததற்கான தடயங்கள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே ஒட்டக உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையே ஒட்டகம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க யாராவது உதவி செய்தால், அவருக்கு தகுந்த வெகுமதி அளிப்பதாக உரிமையாளர் ஹுசைன் குறிப்பிட்டு 89781 26623 என்ற தனது அலைபேசி எண்ணுக்கு தகவல் கொடுக்க கோரியுள்ளார். ஒட்டகம், யானை போன்ற பெரிய விலங்குகள் திருடப்படுவது சிறிய விஷயமல்ல. எனவே நாங்கள் எல்லா கோணங்களிலும் விசாரித்து வருகிறோம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Local News
,
Theft

Related posts

லட்டு பிரசாதத்தின் புனிதத்தை மீட்டெடுத்து விட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: பா.ஜ.க. – சந்திரபாபு நாயுடு கூட்டணியில் உரசலா..?