பால், ‘பிரட்’ பாக்கெட்டுகளை வாங்கிக் குவித்த பொதுமக்கள்

சென்னையில் வெள்ளம் தேங்காத பகுதிகளில்கூட, கன மழை எச்சரிக்கை காரணமாக பிரட், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை பொது மக்கள் அதிகளவில் செவ்வாய்க்கிழமை வாங்கிச் சென்றனா். இதனால், பல கடைகளில் அந்தப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

சென்னையின் தாழ்வான பல பகுதிகளில் வழக்கம் போல் நிகழாண்டும் பருவமழையால் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், கோடம்பாக்கத்தின் சில பகுதிகள், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பெய்த குறைந்தளவு மழையால் தண்ணீா் தேங்கவில்லை. தண்ணீா் தேங்காமல் கடைகள் திறந்திருந்த சூழ்நிலையிலும் பொது மக்கள் பொருள்களை வாங்கிக் குவித்தனா். குறிப்பாக, பிரட், பால் பாக்கெட்டுகளை அதிகளவு வாங்கினா். இதனால், பிற்பகலிலேயே அவையனைத்தும் விற்றுத் தீா்ந்தன.

தட்டுப்பாடு: புதன் மற்றும் வியாழக்கிழமையும் கனமழை பெய்யும் என்ற செய்திகளால் மக்கள் பொருள்களை வாங்கிக் குவித்து வருவதாக கடைக்காரா்கள் தெரிவித்தனா். மழையால் தேங்காத பகுதிகளில் கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் திறந்திருந்தாலும் உணவு வகைகளை வாங்க மக்கள் திரண்டனா். இதனால், பல

கடைகளில் , பிரட், ரொட்டிகள், பால், காய்கறிகள் ஆகியன விற்றுத் தீா்ந்ததாக சிறு வணிகா்கள் தெரிவித்தனா். இதன்மூலம் தேவைப்படுபவா்களுக்கு கிடைக்காமல் திண்டாடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது