பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருது வென்றவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருது வென்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

2024-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகளைப் பெறும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பெயர்களை சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது. இதில் தமிழ் எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் தனது 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ளார். அதே போல் தமிழ் எழுத்தாளர் யூமா வாசுகி 'தன்வியின் பிறந்தநாள்' என்ற கதை தொகுப்பிற்காக பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் எழுத்தாளர்கள் யூமா வாசுகி, லோகேஷ் ரகுராமன் ஆகியோருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா வாசுகி. ஏற்கனவே சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது வென்றுள்ள அவர், தற்போது 'தன்வியின் பிறந்தநாள்' நூலுக்காக பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கும் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் இன்னும் வளம்பெற வேண்டிய சிறார் இலக்கிய வகைமைக்கு அவர் ஆற்றிவரும் பாராட்டுக்குரிய பங்களிப்புக்கான உரிய அங்கீகாரம் இது! வாழ்த்துகள்!

காவிரிக் கரையில் இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாகத் தடம் பதித்து, 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புரஸ்கார் விருதுக்குத் தேர்வாகியுள்ள நம்பிக்கைக்குரிய இளைஞர் லோகேஷ் ரகுராமனுக்கும் எனது பாராட்டுகள்!"

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா வாசுகி. ஏற்கனவே சிறந்த மொழிபெயர்ப்பிற்கான #SahityaAkademi விருது வென்றுள்ள அவர், தற்போது ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்காக #BalSahityaPuraskar-க்கும் தேர்வாகியிருப்பது… pic.twitter.com/IH4oKfKakY

— M.K.Stalin (@mkstalin) June 15, 2024

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!