பிஎம்டபிள்யூ கார் விற்பனை 10% உயர்வு!

மும்பை: ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ குழுமமான பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களின் விற்பனை 10 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 10,556 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

2023ஆம் ஆண்டு 9 மாதங்களில் பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களின் விற்பனை எண்ணிக்கையானது 9,580 யூனிட்களாக இருந்தது.

இது தவிர 5,638 மோட்டோராட் பிராண்டு மோட்டார்சைக்கிள்களையும் விற்பனை செய்துள்ளதாக குழுமம் தெரிவித்துள்ளது.

பிஎம்டபிள்யூ குழுமமானது பிஎம்டபிள்யூ, மினி மற்றும் மோட்டோராட் ஆகிய மூன்று பிராண்டுகளை கொண்டுள்ளது.

10,556 யூனிட்களில், 10,056 பிஎம்டபிள்யூ யூனிட் கார்களையும், மீதமுள்ள 500 மினி பிராண்ட் கார்களை விற்பனை செய்ததாக குழுமம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!