பிகாரில் 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி

பிகாரில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்…15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்ததால் அதிர்ச்சி!

பிகார் பாலம்

பிகாரில் மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்த நிலையில், கடந்த 15 நாட்களில் மட்டும் 9 பாலங்கள் இடிந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவான் மாவட்டத்தில் உள்ள கண்காய் ஆற்றில் நேற்று பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அண்மையில் அங்கு கனமழை பெய்வதால், ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், பாலத்தின் கட்டுமான சுவரில் விரிசல் ஏற்பட்டு, பாலம் இடிந்து விழுந்தது.

விளம்பரம்

கடந்த 15 நாட்களில் பிகார் மாநிலத்தில் மட்டும் 9 பாலங்கள் இடிந்து விழுந்து உள்ளன. தொடர் கனமழையால், கிசான்கஞ்ச் மாவட்டத்தின் தாக்கூர் கஞ்ச் பகுதியில் பண்ட் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.

அதற்கு முன் கிழக்கு சம்கரன், அராரியா, கிஷன்கஞ்ச், மதுபானி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தன. இதன் காரணமாக, முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஆளும் அரசை, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருவதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க:
காதலியை ஆபாச பட வீடியோவை வைத்து மிரட்டியதால் ஆத்திரம் : இளைஞரை சிறுமியின் தந்தையே ஸ்கெட்ச் போட்டு கொன்ற கொடூரம்

இந்த நிலையில் பிகாரில் கடந்த இரண்டு வாரங்களில் ஒன்பது பாலங்கள் இடிந்து விழுந்ததன் எதிரொலியால் மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களின் கட்டமைப்பு தணிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Bihar

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து