பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து மனம் திறக்கின்றனர்.
பிக் பாஸ் வீட்டில் கடந்த இரு நாள்களாக ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தற்போது பார்வையாளர்களின் சுவாரசியத்தைத் தூண்டும் வகையில் போட்டியாளர்களின் கடந்த கால வாழ்க்கை குறித்து பேசும் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் தாங்கள் கடந்து வந்த ஏற்ற இறக்கங்கள் குறித்து போட்டியாளர்கள் கூற வேண்டும். இதில் தங்களைக் குறித்து கூறும்போது மற்ற போட்டியாளர்கள் கேட்க வேண்டும். சுவாரசியம் குறைவதாக நினைக்கும் சக போட்டியாளர்கள், சிவப்பு அட்டையைக் காண்பிக்கலாம். இவ்வாறு மூன்று பேர் சிவப்பு அட்டையை காண்பித்தால், தொடர்ந்து பேசுவதை நிறுத்திவிட்டு அப்போட்டியாளர் வெளியேற வேண்டும்.
இவ்வாறு வெளியேறிய போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் ஒரு தண்டனை வழங்குவார். அதாவது நாள் முழுக்க கையில் ஒரு உருளையைக் கொடுத்து அதனை நாள் முழுவதும் தாங்கியிருக்க வேண்டும் என்பதே அந்த தண்டனை.
கழிப்பறைக்குச் செல்லும்போதும், தூங்கும்போதும் இந்த உருளையை கீழே வைத்துக்கொள்ளலாம்.
தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து கூறும்போது, சுவாரசியமற்று இருந்ததாக நடிகர் தீபக் வெளியேற்றப்பட்டார். இதனால், அவருக்கு பிக் பாஸ் தண்டனை உருளையை வழங்கினார்.
இதேபோன்று சாச்சனா, ஜெஃப்ரி ஆகியோர் தங்கள் கடந்தகால வாழ்க்கை குறித்து கூறும்போது பலரும் சுவாரசியத்துடன் கேட்டனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 8: பெண்கள் அணிக்கு எதிராக மாறிய சாச்சனா?