பிரசவத்தின்போது பலியான கர்ப்பிணி – தகனம் செய்தபின் வெளியான பகீர் உண்மை

பிரசவத்தின்போது உயிரிழந்த கர்ப்பிணி… தகனத்திற்கு பிறகு கிடைத்த ஆதாரத்தால் அதிர்ச்சி – உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு

மருத்துவர்களை கடவுளின் மற்றொரு வடிவமாக மக்கள் பார்க்கின்றனர். கடவுள் ஒரு மனிதனுக்கு உயிர் கொடுத்து, இந்த பூமிக்கு அனுப்புவதைப் போல, பூமியில் உள்ள மனித உயிர்களை மருத்துவர்கள் காப்பாற்றுகின்றனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த பலரையும் மருத்துவர்கள் காப்பாற்றி மறுவாழ்வு கொடுப்பதால், அவர்கள் கடவுளாக பார்க்கப்படுகிறார்கள். குறிப்பாக, தீவிர நோய்களால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு கூட மருத்துவர்கள் புதிய வாழ்க்கையை வழங்குகின்றனர். ஆனால், சில நேரங்களில் மருத்துவர்களின் அலட்சியம் நோயாளியின் உயிரைப் பறித்து விடுகிறது.

விளம்பரம்

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இது போன்ற ஓர் அலட்சிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்கு பிரசவத்தின்போது பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனால், அவரின் விதி அவ்வளவுதான் என முடிவு செய்த உறவினர்கள், பெண்ணின் சடலத்திற்கு இறுதிச் சடங்குகளை செய்து, தகனம் செய்தனர். பின்னர், அவரது சாம்பலை புனித நதிகளில் கரைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு குடுவையில் சாம்பலை சேகரிக்கத் தொடங்கினர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி தரும் ஒன்று சிக்கியது.

இதையடுத்து, ஹஸ்தினாபூர் காவல் நிலையத்திற்குச் சென்ற பெண்ணின் உறவினர்கள், மரணத்திற்கான மருத்துவர்களே காரணம் என குற்றஞ்சாட்டினார். அதாவது, சந்தீப்பின் மனைவி நவ்நீத் கவுர், மீரட்டின் மவானா நகரில் இருக்கும் ஜேகே மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு சுகப்பிரசவம் ஆகாது என்று கூறிய மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை செய்தனர். அப்போது அவர் இறந்துவிட்டார். இதையடுத்து, அவருக்கு இறுதிச் சடங்குகளை நிறைவேற்றி, தகனம் செய்தனர்.

விளம்பரம்

அதன்பிறகு சாம்பலை சேகரிக்கும்போது, ஒரு அறுவைச் சிகிச்சை கத்தி ஒன்று உறவினர்களின் கைகளில் சிக்கியது. இதைப் பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்தபோது, அறுவைச் சிகிச்சை கத்தியை அவரது வயிற்றில் விட்டுவிட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பான புகாரை அடுத்து, மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி, ஜேகே மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தார். மேலும், இதற்கான விசாரணை நடத்தப்படும் என்று கூறி, குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்வார்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
hospital
,
Indian Medical Council
,
Meerut S24p10
,
Trending
,
uttar pradesh
,
viral

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்