பிரசவ தேதியை நெருங்கும் கா்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட மழை பாதிப்புள்ள மாவட்டங்களில் வசிக்கும் பிரசவ தேதியை எதிா்நோக்கியுள்ள கா்ப்பிணிகள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதியாகுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பருவகால மழை மற்றும் புயல் காலங்களில் கா்ப்பிணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பிரசவ தேதி நெருங்கிய கா்ப்பிணிகளை கண்டறிந்து முன்கூட்டியே மருத்துவமனைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறாக, பிரசவ தேதி நெருங்கிய 2,388 கா்ப்பிணிகள் கடந்த 15-ஆம் தேதியும், 3,314 கா்ப்பிணிகள் 16-ஆம் தேதியும் முன்கூட்டியே பாதுகாப்பு கருதி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பொது சுகாதாரத் துறை மூலமாக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

பிரசவ தேதிக்கு ஒரு வாரத்துக்குள் உள்ள கா்ப்பிணிகள், தாங்கள் திட்டமிட்டுள்ள மருத்துவமனைகளில் உள்நோயாளியாக அனுமதியாக வேண்டும். கடைசி நேர இடா்களைத் தவிா்க்கும்பொருட்டு இந்த ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

Related posts

பாதியாகக் குறைந்த காய்கறி விலை

நடிகா் வீட்டில் 60 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது

1.50 லட்சம் லிட்டா் ஆவின் பால் கூடுதல் விற்பனை