பிரச்சினைகளை சரி செய்யுங்கள் – எடப்பாடி பழனிசாமி

மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள், தோல்வி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பணிக்குழு பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தேர்தல் தோல்விக்கு பலமற்ற கூட்டணியே காரணம் என எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர். மேலும் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணத் திட்டம் போன்ற திட்டங்களும் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என கூறியுள்ளனர். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

2026 சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்கும் வாய்ப்பு இல்லை எனவும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார். அதன்விவரம் பின்வருமாறு:- கூட்டணி அமைப்பதை தலைமை பார்த்துக் கொள்ளும். தேர்தல் வெற்றிக்கு பணியாற்றுங்கள். எங்கெல்லாம் பிரச்சினை இருக்கிறதோ அங்கெல்லாம் சரி செய்யுங்கள். நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; 2026 சட்டமன்றத்தேர்தலுக்கு தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!