‘பிரச்னையை முடிக்க விரும்புகிறோம்’ – அன்னபூர்ணா நிறுவனம் அறிக்கை!

அன்னபூர்ணா நிறுவனர் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே நிதியமைச்சரை சந்தித்ததாகவும் இந்த பிரச்னையை முடிக்க விரும்புவதாகவும் அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த செப். 11 ஆம் தேதி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எங்கள் நிறுவனரும் தமிழ்நாடு உணவக சங்கத்தின் தலைவருமான சீனிவாசன் கலந்துகொண்டார். உணவகங்களிலும் பேக்கரிகளிலும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விகித மாறுபாடு இருப்பது குறித்து அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.

அவர் பேசியது தவறாக எதுவும் புரிந்துகொள்ளப்படக் கூடாது என்பதற்காக தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே நிதியமைச்சரை சந்தித்துப் பேசினார். ஆனால், இந்த விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி தவறான புரிதல்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

#Annapoorna#Coimbatore#AnnapoornaCoimbatorepic.twitter.com/UuXQ0W86Ro

— Annapoorna (@Annapoorna_Cbe) September 14, 2024

கேள்வி கேட்டால் அவமானப்படுத்தப்படுகிறார்கள்: அன்னபூர்ணா விவகாரத்தில் ராகுல் கடும் கண்டனம்!

தமிழக பாஜக இதற்கு மன்னிப்பு தெரிவித்ததுடன் விடியோவை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து எங்கள் கருத்துகளை தெரிவிக்கச் செய்ததற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு நன்றி.

தேவையற்ற அனுமானங்கள், தவறான அரசியல் புரிதல்களுக்கு இத்துடன் ஓய்வு கொடுக்க விரும்புகிறோம். இந்த பிரச்னையை முடித்து அடுத்த பணியை தொடர விரும்புவதை அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

இந்த விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த வாடிக்கையாளர்கள், மக்களுக்கு நன்றி என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்கச் செய்வதா? வைரலாகும் விடியோ! நிர்மலா சீதாராமனுக்கு குவியும் கண்டனங்கள்!

அன்னபூர்ணா விவகாரம்

கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவை சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறு, குறு, நடுத்தர வணிக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா உணவகங்களின் நிறுவனர் சீனிவாசன் பேசுகையில், 'இனிப்புக்கு குறைவான ஜிஎஸ்டியும், காரத்துக்கு அதிகமான ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பில் போடுவதில் சிரமம் உண்டாகிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால், அதில் வைக்கும் க்ரீமுக்கு ஜிஎஸ்டி போடப்படுகிறது.

எங்கள் கடைக்கு அடிக்கடி வரும் கோவை எம்எல்ஏகூட சண்டை போடுவார். அவரிடம் ஜிஎஸ்டி குறித்து கேட்கப்பட்டதற்கு, வடநாட்டில் அதிகமானோர் இனிப்பு சாப்பிடுவதால் அதற்கு ஜிஎஸ்டி குறைவு எனக் கூறியுள்ளார்.

எனவே, அனைத்து உணவுப் பொருள்களுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி போட்டால் யாருக்கும் சிரமம் இருக்காது. குறைவாக உள்ள பொருள்களின் ஜிஎஸ்டி விகிதத்தை ஏற்றினாலும் பரவாயில்லை' எனத் தெரிவித்தார்.

இவரது பேச்சை கேட்ட அரங்கில் இருந்தவர்களும் மேடையில் இருந்த நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் சிரித்தனர்.

அன்னபூர்ணா விவகாரம்: மன்னிப்புக் கோரினார் அண்ணாமலை!

இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து, நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த விடியோவும் பாரதிய ஜனதா கட்சியினரால் ஊடகங்களில் பகிரப்பட வைரலாகி எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விடியோவில், நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்த சீனிவாசன், “நான் எந்த கட்சியைச் சார்ந்தவனும் அல்ல. வருந்தும்படி, பேசியதற்கு மன்னித்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவருக்கும் அறிவுரை வழங்கிய நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி குறித்து தாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால், கோவை எம்எல்ஏ கடைக்கு அடிக்கடி வருவார், சண்டை போடுவார் போன்ற கருத்துகள் பொதுவெளியில் எப்படி பேசலாம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ஞானவாபி மசூதி அல்ல, அது சிவன் கோயில்’ – யோகி ஆதித்யநாத் பேச்சு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சீனிவாசன் – நிர்மலா சீதாராமன் சந்தித்த விடியோவை வெளியிட்ட பாஜகவினர் மீது அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் சூழலில் அன்னபூர்ணா உணவக நிர்வாகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அன்னபூர்ணா நிறுவனரை மன்னிப்பு கேட்க வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கண்டித்து கோவையில் தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்