பிரதமர் கல்வித்தகுதி வழக்கு: கேஜரிவாலின் மனு தள்ளுபடி!

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான அவதூறு வழக்கில் கேஜரிவால் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரதமரின் கல்வித் தகுதி குறிதது ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான கேஜரிவால் விமர்சித்து பேசியிருந்தார். இதுதொடர்பாக குஜராத் பல்கலைக்கழகம் கேஜரிவாலுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய் சங் ஆகியோர் நேரில் ஆஜராக விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்மனை எதிர்த்து கேஜரிவால் தரப்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம், கேஜரிவாலின் மனுவை பிப்ரவரி 16ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததோடு, கேஜரிவாலின் மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. இதேவழக்கில் சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் ஒரேமாதிரியான அணுகுமுறையை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறிய உச்ச நீதிமன்றம் கேஜரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி