பிரதமர் திறந்த சத்ரபதி சிவாஜி சிலை: ஓராண்டுக்குள் இடிந்ததால் பரபரப்பு

பிரதமர் மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு

மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடற்படை தினத்தை ஒட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி, மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அங்கு நடந்த நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்நிலையில், சிந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது.

விளம்பரம்

Also Read:
உக்ரைன் பயணம், வங்கதேச நிலவரம் தொடர்பாக அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சு

இதற்கிடையே, கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) பிற்பகல் 1 மணியளவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை பல துண்டுகளாக உடைந்து விழுந்தது. இதற்கு பலத்த காற்றே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை ஓராண்டுக்குள் இடிந்து விழுந்தது பல சர்ச்சைகளை கிளம்பி உள்ளது.

விளம்பரம்

சத்ரபதி சிவாஜி சிலையை முறையாக பராமரிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Maharashtra

Related posts

10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு

ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு

சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவை மாற்றம்