பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் தமிழக பெண் லோகோ பைலட் – யார் அவர் தெரியுமா?
லோகோ பைலட் ஐஸ்வர்யா
சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா மேனனுக்கு பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய அரசு நாளை பதவி ஏற்கிறது. விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நபர்கள் மட்டுமின்றி குடிமக்கள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் மூத்த உதவி ரயில் ஓட்டுநராக பணிபுரியும் ஐஸ்வர்யா மேனன் என்பவருக்கு, பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர், 2 லட்சம் மணி நேரம் ரயில் ஓட்டுநராக பணியாற்றி உள்ளார்.
விளம்பரம்
இதையும் படிக்க:
100 தொகுதிகளில் வெறும் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதா பாஜக.. உண்மை என்ன?
குறிப்பாக, வந்தே பாரத், ஜன் சதாப்தி ரயில்களில் லோகோ பைலட்டாக பணியாற்றி உள்ளார். ரயில்வே சிக்னலை உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் அதிகம் பாராட்டு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் உத்தராகண்டில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்டவர்கள், நாடாளுமன்றம் கட்டிய தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின பெண்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
Locomotive
,
NDA Alliance
,
oath
,
PM Narendra Modi