பிரதமர் மோடி இன்று 7 ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக தகவல்

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தல் திருவிழா சர்வதேச அளவில் கவனம் பெற்று இருக்கிறது. 543 தொகுதிகளை கொண்ட இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகின்றன.

இந்தியாவின் ஆட்சிப்பீடத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அலங்கரிக்கப்போவது யார்? என்ற கேள்விக்கான விடை அன்று பிற்பகலில் கிடைக்கும். ஆளும் பா.ஜனதாவின் ஹாட்ரிக் கனவு நனவாகுமா? அவர்களது நம்பிக்கைக்கு இந்தியா கூட்டணி அதிர்ச்சி அளிக்குமா? என்பதும் 4-ம் தேதி தெரிந்து விடும்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று ஒரேநாளில் 7 ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ராமெல்' புயல், வெப்ப அலை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமையும் பட்சத்தில் அடுத்த நூறு நாட்கள் செயல் திட்டம் உள்ளிட்ட 7 முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி துறைமுகம் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

மெட்ரோ ரெயிலில் பயணித்த பிரதமர் மோடி

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்