பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும்: ராகுல் காந்தி

பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும் என்று ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

அரசின் கொள்கையை தீர்மானிப்பது பிரதமர் மோடியா? அல்லது பாஜகவின் மக்களவை உறுப்பினரா?

700-க்கும் மேற்பட்ட ஹரியாணா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்த பிறகும் பாஜகவினர் திருப்தி அடையவில்லை.

மீண்டும் வேளாண் சட்டங்கள்? – காங்கிரஸ் எதிர்ப்பு! மன்னிப்பு கேட்டார் கங்கனா

விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் எந்த சதியும் வெற்றிப் பெற இந்தியா கூட்டணி அனுமதிக்காது. விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டால், பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

सरकार की नीति कौन तय कर रहा है? एक भाजपा सांसद या प्रधानमंत्री मोदी?
700 से ज़्यादा किसानों, खास कर हरियाणा और पंजाब के किसानों की शहादत ले कर भी भाजपा वालों का मन नहीं भरा।
INDIA हमारे अन्नदाताओं के विरुद्ध भाजपा का कोई भी षडयंत्र कामयाब नहीं होने देगा – अगर किसानों को नुकसान… pic.twitter.com/ekmHQq6y5D

— Rahul Gandhi (@RahulGandhi) September 25, 2024

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம்-வேளாண் சேவைகள் சட்டம் ஆகியவற்றை கடந்த 2020-ல் மத்திய அரசு நிறைவேற்றியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் நீண்ட போராட்டம் நடைபெற்ற நிலையில், மத்திய அரசு இந்த மூன்று சட்டங்களையும் 2021-ல் திரும்பப் பெற்றது.

இந்த 3 வேளாண் சட்டங்களையும் மீண்டும் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related posts

திருப்பதி பிரம்மோற்சவம் : தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செய்திகள் சில வரிகளில்……