‘பிரதர்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி 'பிரதர்' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இவர் தற்போது, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் 'பிரதர்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ் இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 'பிரதர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் வருகின்ற 21ம் தேதி பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. மேலும் அதே நாளில் இப்படத்தின் டீசரும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து மக்காமிஷி எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் டிரண்டாகி வந்தது.

இந்நிலையில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் தங்களின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளனர் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதே சமயம் மற்ற பாடல்களும் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Get ready to vibe with #brother for this Diwali @actor_jayamravi and @priyankaamohan final dubbing completed, Post production in full swing Musical surprises on your way @rajeshmdirector@Jharrisjayaraj@thinkmusicindia@johnsoncinepro#brotherfromdiwalipic.twitter.com/bWUkHmWrAz

— Screen Scene (@Screensceneoffl) September 13, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!