‘பிரதர்’ படத்தின் புரமோசன் பணிகள் தீவிரம்

'பிரதர்' திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.

சென்னை,

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான 'பிரதர்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. 'பிரதர்' படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படமானது அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குனர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. அதன்படி இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படக்குழுவினர் புரமோசன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன்படி, ராமசந்திர மருத்துவக் கல்லூரியில் படத்தின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நடிகர் ஜெயம் ரவி கல்லூரி மாணவிகளுடன் 'மக்காமிஷி' பாடலுக்கு நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Sri Ramachandra Medical College's energy level is Unreal ✨Our #Brother@actor_jayamravi & Our Director @rajeshmdirector in Sri Ramachandra Medical College’s Meraki 24 ✌Brother Promotions on full swing #BrotherFromDiwali@Screensceneoffl@skiran_kumar… pic.twitter.com/97CSC5w38a

— Screen Scene (@Screensceneoffl) October 6, 2024

Original Article

Related posts

சினிமாவில் கவர்ச்சிப் பொருளாக இருக்க மாட்டேன்- நடிகை பிரியா பவானி சங்கர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்?

வேல்ஸ் நிறுவனம் வெளியிட்ட புதிய படத்தின் அறிவிப்பு