பிரபலங்களுடன் கமலா ஹாரிஸ் நேரடி உரையாடல்! பிரபலங்களின் ஆதரவு கமலா ஹாரிஸுக்கு உதவுமா?

அமெரிக்காவில் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமலா ஹாரிஸ் பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடினார்.

அமெரிக்காவில் பிரபல நட்சத்திரங்களின் ஆதரவுகளைப் பெறுவதன் மூலம், அதிபர் தேர்தலில் மாற்றம் ஏற்படுத்த முடியுமா என்ற கருத்துகள் அமெரிக்க மக்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் வியாழக்கிழமையில், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே தொகுத்து வழங்கிய நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஓப்ரா வின்ஃப்ரே தற்போதைய எதிர்க்கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றால், தானும் துணையதிபராக ஆசைப்படுவதாக 2000 ஆவது ஆண்டில் கூறியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ட்ரேசி எல்லிஸ் ரோஸ், ஜூலியா ராபர்ட்ஸ், மெரில் ஸ்ட்ரீப், கிறிஸ் ராக், பென் ஸ்டில்லர் ஆகியோரும் பங்கேற்றனர். மேலும், ஆன்லைன் விடியோ மூலம் சிலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நோக்கம்

சுமார் 90 நிமிட உரையாடலின்போது, பார்வையாளர்களுடன் கமலா ஹாரிஸ் நேரடியாகப் பேசினார். அவர்கள் குடியேற்றம், வாழ்க்கைச் செலவு, இனப்பெருக்க உரிமைகள் மீதான ஒடுக்குமுறை குறித்து தங்கள் கவலைகளை எழுப்பினர்.

வொய்ட் டூட்ஸ் ஃபார் ஹாரிஸ், கேட் லேடிஸ் ஃபார் கமலா, லடினாஸ் ஃபார் ஹாரிஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஆன்லைனில் குழுக்களாக இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் என மொத்தம் சுமார் 2 லட்சம் பேர் கண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

பெண்களின் சுதந்திரத்தைப் பறித்த டிரம்ப்

பெரும்பாலான கருக்கலைப்புகளுக்கு தடை விதித்ததற்கு மத்தியில், மருத்துவ கவனிப்புக்காகக் காத்திருந்து, இறந்த ஜார்ஜியா பெண் ஒருவரின் தாயை அறிமுகப்படுத்தியபோது, சிலர் கண்கலங்கிய நிகழ்வும் நடந்தது.

அவருக்கு தனது இரங்கலைத் தெரிவித்த ஹாரிஸ், கருக்கலைப்பு தடைகளை மாநிலங்கள் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன், டிரம்ப் தனது மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியதுடன் “அவர் விரும்பியபடி அவர்கள் செய்தார்கள்" என்றும் தெரிவித்தார்.

கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்வதற்கான டிரம்ப்பின் ஆதரவு பெண்களின் சுதந்திரத்தை பறித்ததாக அங்கு கூடியிருந்தோர் கூறினர்.

மசோதா

எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்த கமலா என்ன செய்வார்? என்று பார்வையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஹாரிஸ், எல்லையில் சட்ட அமலாக்கத்திற்கு அதிக நிதியை வழங்கியிருக்கும் சட்டத்தை, டொனால்ட் டிரம்பை கொலை செய்து விட்டார் என்று கூறினார்.

கமலா ஹாரிஸ்

இனப்பெருக்க உரிமைகள் குறித்த டிரம்பின் நிலைப்பாட்டை எதிர்த்து பேசிய கமலா, எல்லை பாதுகாப்பு மசோதாவில் கையெழுத்திடுவதாகவும் உறுதியளித்தார்.

மேலும், சில வாரங்களுக்கு முன்பாக, ஜார்ஜியாவில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்தும் அவர்கள் உரையாடினர்.

அதிபர் ஹாரிஸ்

இதனிடையே, கமலாவை நோக்கி பேசிய ஒருவர் “வணக்கம், அதிபர் ஹாரிஸ்’’ என்றார். பதிலுக்கு அவரிடம் பேசிய கமலா “அய்யோ! இன்னும் நாற்பத்தேழு நாள்கள்’’ என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

பேஜர்கள் வெடிப்பில் கேரள தொழிலதிபருக்கு தொடர்பா?

உத்தரவாதம்?

ஜேன் ஃபோண்டா எனும் 86 வயதான நடிகை, கமலா ஹாரிஸுக்காக வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்வது போன்ற விடியோவும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அதுமட்டுமின்றி, பிரபல பாடகரான டெய்லர் ஸ்விஃப்ட்டும் கமலாவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியிருந்தார். பிரபலங்களின் ஆதரவு கமலாவுக்கு இளைஞர்களுடைய வாக்குகள் அதிகளவில் பெறப்பட்டாலும், இவை எதுவும் கமலா ஹாரிஸை வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் என்று உறுதியாகக் கூறமுடியாது என்ற கருத்துகளும் நிலவி வருகிறது.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்