பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

மும்பை,

இந்தியாவில் உள்ள பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. இவருக்கு வயது 86. இந்நிலையில் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார் ரத்தன் டாடா. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் வயது மூப்புகாரணமாக அவர் நேற்று நள்ளிரவு காலமானார். ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related posts

Navi Mumbai International Airport Set For Inaugural Take-Off And Landing Trial On October 11

Ratan Tata Passes Away At 86: PM Narendra Modi Mourns Death Of The ‘Visionary Business Leader’

Mumbai: Delisle Road Bridge Footpath Construction Begins After Year Of Community Inconvenience