பிரபு தேவா நடித்துள்ள ‘பேட்ட ராப்’ படத்தின் டீசர் வெளியானது

'பேட்ட ராப்' படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

சென்னை,

மலையாள இயக்குனர் எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பேட்ட ராப்'. இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை வேதிகா நடித்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரியில் தொடங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் 'பேட்ட ராப்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Glad to release the teaser of #PettaRap, Good luck to the entire team https://t.co/qMniEu1Hp3#PaatuAdiAattamRepeat@PDdancing@vedhika4u@sunnyleone@sinu_sj@immancomposer@tseriessouth@swetamohan@viveka_lyrics@nehabhasinteam@nikhitagandhi@deepthisings@thilak_ramesh… pic.twitter.com/zDZ198BqWL

— VijaySethupathi (@VijaySethuOffl) June 22, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!