பிரான்ஸின் உயரிய சிவிலியன் விருதை பெற்ற இந்திய தொழிலதிபர் ரோஷினி

பிரான்ஸின் உயரிய சிவிலியன் விருதை பெற்ற இந்திய தொழிலதிபர் ரோஷினி!

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், HCL நிறுவனத்தின் தலைவருமான ரோஷினி நாடார் மல்ஹோத்ராவுக்கு பிரான்ஸின் உயரிய விருதான சிவிலியன் விருது வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியரி மாத்தூ, ரோஷினி நாடார் மல்ஹோத்ராவுக்கு விருதை வழங்கினார்.

பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்தியதற்காகவும், சிறந்த சேவைக்காகவும் பிரான்ஸின் உயரிய சிவிலியன் விருது ரோஷினி நாடார் மல்ஹோத்ராவுக்கு வழங்கப்பட்டது.

விளம்பரம்

இந்த விருதை பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவை அடிக்கோடிட்டு காட்டுவதாகவும் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

nw_webstory_embed
மேலும் செய்திகள்…

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான Knight of the Legion of Honour விருது, 1802 ஆம் ஆண்டு நெப்போலியன் போனபார்ட்டால் நிறுவப்பட்டது. இந்த விருது குறிப்பாக பிரான்ஸ் நாட்டவர்களுக்கானது என்ற போதிலும், அந்நாட்டின் லட்சியங்களுக்கு உதவும் வெளிநாட்டு தலைவர்களுக்கும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
award
,
France
,
HCL

Related posts

பெங்களூருவில் பயங்கரம்: முக்கியக் குற்றவாளியைக் கண்டறிந்த காவல்துறை!

நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு… மீஷா ஐயர்!

காதல்ஜோடியிடம் பணம் பறிப்பு! காவலர் இடைநீக்கம்!