பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி

முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட இந்திய வீரர் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.

பாரீஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான சுமித் நாகல் ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கரேன் கச்சனோவ் 6-2, 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இதையடுத்து முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட இந்திய வீரர் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.

Related posts

வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இந்தியா-வங்காளதேசம் 2வது டெஸ்ட்; ஈரமான அவுட் பீல்டு காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

4வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்