பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; காலிறுதியில் ரைபகினா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 2-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ரைபகினா, 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற 3வது செட்டில் முன்னணி வீராங்கனை ரைபகினா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 4-6 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

இறுதியில் முன்னணி வீராங்கனையான எலினா ரைபகினா 2-6, 6-4, 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா