பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ், சின்னர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டேவிட் கோபின் (பெல்ஜியம்) உடன் மோதினார். இந்த போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், டேவிட் கோபினை 7-6 (7-4), 6-2, 6-2 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். இதே போல் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜானிக் சின்னர் (இத்தாலி) 6-4, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை (பிரான்ஸ்) சாய்த்தார்.

மெட்விடேவ் (ரஷியா), டிமிட்ரோவ் (பல்கேரியா), அலியாசிம் (கனடா), ஷபோவலோவ் (கனடா), ஹர்காக்ஸ் (போலந்து) ஆகியோரும் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் உள்நாட்டு வீராங்கனை டியானே பேரியை மடக்கினார். ரைபகினா (கஜகஸ்தான்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), பாலா படோசா (ஸ்பெயின்), லேலே பெர்னாண்டஸ் (கனடா), வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றியை ருசித்தனர்.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து