பி.எட்., கலந்தாய்வு ஒத்திவைப்பு! அக். 22-ல் நடைபெறும்

தொடர் கனமழை காரணமாக பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒத்திவைத்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சென்னை, லேடி வில்லிங்டன் கல்வியியல் கல்லூரியில் நாளை (அக். 16) நடைபெற இருந்த பி.எட். (கணிதவியல், புவியமைப்பியல், கணினி அறிவியல், மனையியல், பொருளியல் மற்றும் வணிகவியல்) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கனமழை காரணமாக அக். 22 (செவ்வாய்க் கிழமை) அன்று நடைபெறும் என அறிவிக்கலாகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடதமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணத்தால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (அக். 15) காலை முதல் சென்னையில் இடி, மின்னலுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

இதையும் படிக்க | கனமழை: தேமுதிக அலுவலகத்தை மக்கள் பயன்படுத்தலாம்!

இதனிடையே இன்று பிற்கலம் முதல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் அதி கனமழை (சிவப்பு எச்சரிக்கை) பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது