புகாருக்கு தீர்வு காணாமல் முடித்து வைக்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி சேவையில் உள்ள குறைபாடுகள் பற்றி பொதுமக்கள், 'நம்ம சென்னை' செயலி மூலமும், இணையதளம் வழியாகவும் புகார் தெரிவிக்கலாம். மேலும் 1913 என்ற தொலைபேசி மூலமும் புகார் தெரிவிக்கலாம். 1913 தொலைபேசி எண்ணுக்கு அதிக அளவில் புகார்கள் வரும் நிலையில், புகார்களை பெறும் பணியாளர்கள் எண்ணிக்கை 10-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புகார்களை பெறும் பணியாளகள், புகார்தாரர்களிடம் கனிவாக பேச வேண்டும் என்றும், புகார்கள் மீது தீர்வு காணப்பட்டதை உறுதி செய்த பிறகே, அந்த புகாரை முடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் புகாருக்கு தீர்வு காணாமல் முடித்து வைக்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.