புகையிலைப் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்

புகையிலைப் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்கொள்ளிடம் பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

சீா்காழி, ஜூலை 25: கொள்ளிடம் பகுதியில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலா் ரமேஷ்குமாா் தலைமையில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கொளஞ்சியன், சுகாதார ஆய்வாளா்கள் லெட்சுமணன், சதீஷ்குமாா் உள்ளிட்ட 11 போ் கொண்ட குழுவினா், கொள்ளிடம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கும், பொதுஇடங்களில் புகை பிடித்தவா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதனுடன், 12 வயதுக்குட்பட்டவா்களுக்கு ‘பீடி, சிகரெட் விற்பனைக்கு இல்லை’ போன்ற அறிவிப்பு பதாகைகள் வைக்காத கடைகளுக்கும் அபராதம் விதித்தனா்.

மேலும், உணவகங்கள், பேக்கரி கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்தினா். இந்த ஆய்வில், மக்களை தேடி மருத்துவ சுகாதார அலுவலா்கள் இளங்செழியன், அன்புச்செழியன், வெங்கட பிரசாத், பவித்ரன், வசந்தராஜா ஆகியோரும் பங்கேற்றனா்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா..? – சுப்ரீம்கோர்ட்டில் நாளை தீர்ப்பு

பணியிடத்தில் அழுத்தம்…? அலுவலகத்தில் மயங்கி விழுந்து பெண் பணியாளர் மர்ம மரணம்

போராட்டம் நடைபெறும் கனவுரி எல்லையில் விவசாயி தற்கொலை