புகையிலை பயன்பாட்டைக் குறைக்கும் வழிமுறைகளை தீவிரப்படுத்தவும்: மத்திய அமைச்சகம்!

மாநில அரசுகள் புகையிலை பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை தீவிரமாக செயல்படுத்துமாறு மத்திய கல்வி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலர்கள் மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின்படி, சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருள்கள் சட்டம், 2003 இன் விதிகளுக்கு இணங்க, புகையிலை இல்லா கல்வி நிறுவனங்கள் திட்டம் தொடர்பான அறிவுறுத்தல்களைக் கடுமையாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில், குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே புகையிலை பயன்பாடு அதிகரித்திருப்பதன் ஆபத்தைக் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

உலகளாவிய இளைஞர் புகையிலை பயன்பாடு குறித்த கணக்கெடுப்பு 2019 இன் படி இந்தியாவில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களில் 8.5 சதவீதம் பேர் புகையிலையை வெவ்வேறு விதமாக உட்கொள்வதைக் குறிப்பிட்டுள்ளது.
இதில், கவலையளிக்கும் விதமாக ஒரு நாளைக்கு 5,500 சிறுவர்கள் வரை புதிதாக புகையிலை பயன்படுத்தத் தொடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீடி புகைப்பதால் 5.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலி… ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

மேலும், தொடர்ந்து புகையிலை பயன்படுத்துபவர்களில் 55 சதவீதம் பேர் 20 வயதிற்கு முன்பே இந்தப் பழக்கத்தைத் தொடங்கியதாகவும், இதன் விளைவாக இளம் வயதினர் பலரும் வெவ்வேறு வகையான போதைப் பொருள் பயன்பாட்டுக்கு மாறுவதாகக் கூறப்படுகிறது.
புகையிலை பழக்கத்தின் ஆபத்துகளில் இருந்து இளைஞர்களைப் பாதுகாக்க அனைவரின் கூட்டு முயற்சிகளின் தேவையை இந்த ஆலோசனை வலியுறுத்துகிறது. மேலும், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாஜக என்னை மௌனமாக்கத் துடிக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

புகையிலை மற்றும் மின்னணு சிகரெட் பயன்பாட்டிலிருந்து சிறார்களையும் இளைஞர்களையும் பாதுகாப்பதற்காக, புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் தொடர்பாக தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.
மேலும், சமூகப் பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டுச் சங்கத்துடன் பள்ளிக் கல்வித் துறை இணைந்து உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில், புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் திட்டத்தின் அமல்படுத்துவதற்கான கையேட்டை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனைக் கடந்த மே 31 அன்று அனைத்து மாநில கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கியிருந்தனர்.

அயோத்திக்கு அனுப்பிய திருப்பதி லட்டு: நன்கொடையாக வந்த 2,000 கிலோ நெய்!

இந்த புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட கையேடு முக்கிய ஆதாரமாக செயல்படுகிறது.
இதன்மூலம், கல்வி நிறுவனங்களில் ஆரோக்கியமான மற்றும் புகையிலை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் புகையிலை இல்லாததாக மாற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து