புணே: முன்னாள் கிரிக்கெட் வீரரின் தாயார் சடலமாக மீட்பு

புணே குடியிருப்பில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சலில் அன்கோலாவின் தாயார் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், டெக்கான் ஜிம்கானா பகுதியில் உள்ள பிரபாத் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான சலில் அன்கோலாவின் தாயார் மாலா அசோக் அன்கோலா(77) வசித்து வந்தார். இவர் குடியிருப்பில் இருந்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

வழக்கம்போல் இன்று அவரது பணிப் பெண் வீட்டிற்கு வந்து கதவை தட்டியிருக்கிறார். ஆனால் கதவு திறக்கப்படாததால் இதுகுறித்து மாலா அசோக் அன்கோலாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து கதவைத் திறந்து பார்த்தபோது, ​​அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

அக்.17 முதல் அதிமுக தொடக்கவிழா பொதுக்கூட்டங்கள்

இதுகுறித்து காவல்து துணை ஆணையர் சந்தீப் சிங் கில் கூறுகையில், காயங்கள் சுயமாக ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், நாங்கள் அனைத்து கோணங்களிலும் வழக்கை விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார். சலில் அன்கோலா 1989 ஆண்டு முதல் 1997 ஆண்டு வரை ஒரு டெஸ்ட் மற்றும் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

பின்னர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் அவர் கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!