புணே விமான நிலையத்தின் பெயர் மாற்றம்!

புணே விமான நிலையத்தின் பெயர் துக்காராம் மஹாராஜ் என மாற்றம் செய்யப்படுவதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

17-வது நூற்றாண்டைச் சேர்ந்த துறவி துக்காராம் மஹாராஜ்ஜை சிறப்பிக்கும் வகையில் புணே விமான நிலையத்துக்கு அவரது பெயரைச் சூட்டி மகாராஷ்டிர அரசு கெளரவித்துள்ளது.

இன்று நடைபெற்ற மகாராஷ்டிர அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் வரலாற்றில், முக்கிய ஆன்மிகவாதியான துறவி துக்காராம் மஹாராஜ்க்கு மரியாதை செலுத்துவதற்காக புணே விமான நிலையத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் பக்தி இயக்கத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக அனைவராலும் அறியப்படுகிறார்.

இலங்கை: என்ன செய்யப் போகிறார் புதிய அதிபர்?

புணே விமான நிலையத்தின் பெயரை மாற்றுவதற்கு மத்திய சாலை போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னதாகவே பரிந்துரை செய்து, மத்திய அரசிடம் விரைவில் அனுமதி பெறப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”புணே சர்வதேச விமான நிலையத்தின் பெயரை ஜகத்குரு சந்த்ஸ்ரேஸ்தா துக்காராம் மஹாராஜ் புணே சர்வதேச விமான நிலையம் என மாற்றுவதற்கான முதல் நடவடிக்கைக்கு, மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி