புதிய அமைச்சரவையில் எந்தெந்த துறைகள்… லிஸ்ட் போட்ட சந்திரபாபு நாயுடு

புதிய அமைச்சரவையில் எந்தெந்த துறைகள்… சந்திரபாபு நாயுடு கொடுத்த லிஸ்ட் இதுதான்?

மோடி, சந்திரப்பாபு நாயுடு

பாஜக அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கான அமைச்சர் பதவிகளில் அதிக இடங்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்கள் கிடைக்காததால், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உள்ளது.

இந்தநிலையில், பாஜக கூட்டணி அரசில் ரயில்வே, தரைவழிப் போக்குவரத்து மற்றும் கிராமப்புற வளர்ச்சி என மூன்று கேபினட் அமைச்சர் மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

மேலும் சாதிவாரி கணக்கெடுப்பை உட்படுத்தி பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, பிகார் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும் நிதிஷ்குமார் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அளவுக்கு மீறி செவ்வாழை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் 6 பக்கவிளைவுகள்.!
மேலும் செய்திகள்…

2019இல் 16 இடங்களில் வென்றபோது 4 கேபினட் அமைச்சர் பதவிகளை ஐக்கிய ஜனதா தளம் கேட்டிருந்தது. ஆனால் அப்போது தனிப்பெரும்பான்மை பெற்றதால் அக்கட்சியை பாஜக அமைச்சரவையில் சேர்க்கவில்லை.

தெலுங்கு தேசம் கட்சி

விளம்பரம்

இதேபோல் தெலுங்கு தேசம் கட்சி, மக்களவை சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உள்துறை, பாதுகாப்பு, ரயில்வே, தகவல் தொழில்நுட்ப துறை ஆகிய 4 கேபினட் அமைச்சர்கள், இரண்டு இணை அமைச்சர்கள் என மொத்தம் 6 அமைச்சர் பொறுப்புகளை அக்கட்சி கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த 6 அமைச்சர் பொறுப்புகளில் ஒன்றை ஜனசேனா கட்சிக்கு வழங்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

விளம்பரம்

ஆனால், நிதி, பாதுகாப்பு, உள்துறை, வெளியுறவு, தகவல் தொழில்நுட்பம், ஆகியவற்றை விட்டு கொடுக்க பாஜக மறுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என கூறி 2018இல் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியே வந்தது.

இதையும் படிக்க:
கூட்டணியால் பாஜக இழக்கப் போவது என்ன? நரேந்திர மோடியின் அடுத்த மூவ் என்ன?

இந்த முறை சிறப்பு அந்தஸ்தை வலியுறுத்தாவிட்டாலும், ஆந்திராவுக்கு கூடுதல் நிதி வழங்க வலியுறுத்தப்படும் என தெரிகிறது.

பாஜக கூட்டணி அரசில் ரயில்வே, தரைவழிப் போக்குவரத்து மற்றும் கிராமப்புற வளர்ச்சி என 3 கேபினட் அமைச்சர் மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

மேலும் சாதிவாரி கணக்கெடுப்பை உட்படுத்தி பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்க வேண்டும் என்றும்,

பிகார் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும் நிதிஷ்குமார் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
chandhrababu naidu
,
Lok Sabha Election 2024
,
Lok Sabha Election Results 2024
,
nithish kumar
,
PM Modi

Related posts

விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்