புதிய கந்துவட்டி தடை சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

கடுமையான தண்டனைகளுடன் கூடிய புதிய கந்துவட்டி தடை சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலியில் கந்துவட்டிக் கொடுமையின் உச்சமாக சாவித்திரி என்ற மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதும், அவரது மகன் கண்ணன் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் அதிா்ச்சியளிக்கிறது.

கந்துவட்டிக் கொடுமையால் நிகழும் தற்கொலைகள் அதிகரித்ததைத் தொடா்ந்து 14.11.2003-இல் தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி அதிகபட்ச தண்டனை 3 ஆண்டுகள்தான். எனவே, கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்.

திருநெல்வேலியில் மூதாட்டி சாவித்திரியை அடித்துக் கொலை செய்தவா்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

Related posts

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி இன்று ரஷியா பயணம்

உமா பதிப்பக நிறுவனா் இராம. லட்சுமணன் காலமானாா்