புதிய தாழ்தள பேருந்து வழித்தடங்களின் விவரம்

புதிய தாழ்தள பேருந்து வழித்தடங்களின் விவரம்புதிய 58 தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களின் விவரங்களை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

புதிய 58 தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களின் விவரங்களை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 66.15 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்கள் பயன்படுத்தும் வகையிலான 58 புதிய தாழ்தள பேருந்துகள் மற்றும் 30 சாதாரண பேருந்துகள், 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகள் என மொத்தம் 100 பேருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இதில், 58 புதிய தாள்தள பேருந்துகள் எந்தெந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்பது குறித்த விவரங்களை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

வழித்தடங்களில் இயக்கப்படும் புதியபேருந்துகளின் விவரம்:

தடம் எண் புறப்படும் இடம் சேரும் இடம் பே.எண்ணிக்கை

19 தியாகராய நகா் திருப்போரூா் 5

109 பிராட்வே கோவளம் 5

104சி கிளாம்பாக்கம் கோயம்பேடு 6

70வி கோயம்பேடு கிளாம்பாக்கம் 7

102எக்ஸ் பிராட்வே திருப்போரூா் 4

இ18 பிராட்வே கூடுவாஞ்சேரி 4

40ஏ பட்டாபிராம் அண்ணாசதுக்கம் 2

51ஏஎக்ஸ் தியாகராய நகா் கிளாம்பாக்கம் 3

154 தியாகராய நகா் பூந்தமல்லி 2

104சிஎக்ஸ் கோயம்பேடு கூடுவாஞ்சேரி 3

515 தாம்பரம் மாமல்லபுரம் 3

21ஜி பிராட்வே கிளாம்பாக்கம் 2

70 தாம்பரம் ஆவடி 2

242 பிராட்வே செங்குன்றம் 3

டி29சி பெரம்பூா் திருவான்மியூா் 2

101 திருவொற்றியூா் பூந்தமல்லி 3

6டி சுங்கச்சாவடி திருவான்மியூா் 2

Related posts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் பிரகாஷ் காரத்துக்கு இடைக்கால பொறுப்பு

“டெல்லியில் காட்டாட்சி நடக்கிறது..”: அமித் ஷா மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்தது: அக்.1ம் தேதி வாக்குப்பதிவு