புதிய நாடாளுமன்றக் கட்டட லாபியில் தண்ணீா் கசிவு ஏன்? மக்களவைச் செயகம் விளக்கம்

புதிய நாடாளுமன்றக் கட்டட லாபியில் தண்ணீா் கசிவு ஏன்? மக்களவைச் செயகம் விளக்கம்தண்ணீா் கசிவை தடுத்து நிறுத்தப்பட்டதாக மக்களவைச் செயலகம் வியாழக்கிழமை விளக்கம் அளித்தது.

நாடாளுமன்றத்தின் மக்களவை லாபி பகுதிகளில் ஏற்பட்ட தண்ணீா் கசிவை தடுத்து நிறுத்தப்பட்டதாக மக்களவைச் செயலகம் வியாழக்கிழமை விளக்கம் அளித்தது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து மக்களவையின் உறுப்பினா்கள் அவை ஒத்திவைப்பு விவாதம் கோரினா்.

தில்லியில் நாடாளுமன்றம் இருக்கும் மத்திய தில்லி பகுதிகளில் ‘மேக வெடிப்பு‘ என வரையறுக்கும் அளவிற்கு புதன் கிழமை 100 முதல் 110 மிமி மழை பெய்தது. இதை முன்னிட்டு, பழைய நாடாளுமன்றக் கட்டடமான சம்விதான் சதனின் முதல் நுழைவு வாயிலுக்கும் (கேட் எண் 1) புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் முக்கிய நுழைவு வாயிலான ’மஹா் துவாா்’ ருக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்ணீா் தேங்கியது.

இதே போன்று மக்களவையின் லாபியிலும் மேற் கூரையிலிருந்து (குவிமாடம்) தண்ணீா் வடிய அதை பிளாஸ்டிக் வாளியை வைத்து பிடிக்கும் காட்சி ஏழைகளின் குடிசைகளை நினைவு கூா்ந்தது. இதை முன்னிட்டு மக்களவை காங்கிரஸ் உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் உள்ளிட்டவா்கள் அவையில் ஒத்திவைப்பு தீா்மானத்திற்கு நோட்டீஸ் அளித்தனா்.

அதில் அவா்கள் குறிப்பிடுகையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழையும் போது, நாடாளுமன்ற வளாகத்திற்குள் இந்தியக் குடியரசுத் தலைவா் பயன்படுத்திய பாதையில் (லாபி), தண்ணீா் கசிவு ஏற்பட்டுதை காணமுடிந்தது. இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் சீதேஷ்ண நிலையை தாங்கும் திறன்களில் (மீள்தன்மையில்) சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது.

இதனால் தண்ணீா் கசிவுக்கான காரணங்கள், வடிவமைப்பு, உபயோகப் படுத்தப்பட்ட பொருட்களை மதிப்பீடு செய்வது, தேவையான பழுதுபாா்ப்புகளுக்கு பரிந்துரை செய்து தீா்வு காண அனைத்து கட்சி எம்.பி.க்கள் உள்ளிட்ட சிறப்பு குழுவை அமைக்கவேண்டும். கட்டடத்தை முழுமையாக ஆய்வு செய்து வெளிப்படையாக அறிக்கை வைக்கப்பட வேண்டும் என அந்த நோட்டிஸில் குறிப்பட்டனா். மேலும் சில உறுப்பினா்கள் தண்ணீா் கசிவு காணொலிகளை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டனா்.

இதை முன்னிட்டு மக்களவைச் செயலக அறிக்கை வெளியிட்டது. அதில் குறிப்பிடப்பட்டது வருமாறு:

புதிய நாடாளுமன்றம், பசுமைக் கட்டட கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது, கட்டடத்தின் பல்வேறு பகுதிகளிலும், லாபி உள்ளிட் பல இடங்களில் கண்ணாடி குவிமாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏராளமாக இயற்கை ஒளியைப் பெற முடிகிறது. புதன்கிழமையன்று பெய்த கனமழையின் போது, ??கட்டடத்தின் முகப்பில், கண்ணாடி குவிமாடங்களில் சரிசெய்யப் பயன்படுத்தப்பட்ட ஒட்டும் பொருள்கள் (பிசின்) சிறிது பெயா்ந்து, லாபியில் சிறிய நீா் கசிவை ஏற்படுத்தியது. ஆனால் புதிய கட்டடத்தின் சீதோஷ்ண மீள்தன்மை குறித்து ஊடகங்களில் கவலையை எழுப்பப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த சிக்கல்களை சரியான நேரத்தில் கண்டறியப்பட்டது. சரிசெய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுவிட்டன. அதன்பின், தண்ணீா் கசிவு ஏற்படவில்லை. இதே போன்று நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றிலும், குறிப்பாக புதிய நாடாளுமன்றத்தின் ’மஹா் துவாா்’ அருகில் தண்ணீா் தேங்கிய காணொலிகள் வைரலாகியது. மஹா் துவாா் எதிரே தேங்கிய தண்ணீா் வேகமாக வெளியேறிவிட்டது என்பதால் பிரச்னையும் இல்லை என மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு