புதிய படத்தில் இணைந்த எதிர்நீச்சல் நந்தினி!

புதிய படத்தில் இணைந்த எதிர்நீச்சல் நந்தினி!எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்தில் நடித்த, நடிகை ஹரிபிரியா இசை புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்.நடிகை ஹரிபிரியா இசை இன்ஸ்டாகிராம்

எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்தில் நடித்த, நடிகை ஹரிபிரியா இசை புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

எதிர்நீச்சல் தொடரில் நடிப்பதற்கு முன்பே, சில இணைய நகைச்சுவைத் தொடர்களில் நடித்திருந்த நிலையில், எதிரீச்சல் தொடரில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் நடிக்கவுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்தில் ஹரிபிரியா இசை நடித்திருந்தார். நகைச்சுவை, நக்கல் கலந்த அவரின் பாத்திரம், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

எதிர்நீச்சலில் கொடூர வில்லனாக வரும் ஆதி குணசேகரனை கண்டு அனைவரும் நடுங்கும்போது, நந்தினி அவரையும் நக்கல் செய்து நகர்ந்து செல்வார். இதனால், நந்தினி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

ஆதி குணசேகரன் வீட்டில் இருக்கும் 4 மருமகள்களில் மற்ற மூவரை விஞ்சி, தனித்துவமாகவும் நந்தினி பாத்திரம் இருந்தது. அதில் ஹரிபிரியா இசை நடிப்புக்கு பல விருதுகளும் கிடைத்தது.

சின்னத்திரைக்கு வழங்கப்படும் விருதுகளில் சிறந்த துணை நடிகை, சிறந்த நகைச்சுவை ஆகிய பிரிவுகளில் ஹரிபிரியா இசை விருது பெற்றுள்ளார். இது எதிர்நீச்சலில் நந்தினியாக அவர் நடித்ததற்கு கிடைத்த அங்கீகாரங்கள் எனலாம்.

எதிர்நீச்சல் தொடர் முடிந்த பிறகு, வீட்டில் அமராமல், சொந்தமாக நடனப் பள்ளியை ஆரமித்து, அதன்மூலம் வருவாய் ஈட்டி வந்தார். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என சீரியலில் மட்டும் பேசாமல், நிஜ வாழ்க்கையிலும் அதன்படி வாழ்ந்து வரும் ஹரிபிரியாவுக்கு தற்போது வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்துள்ளது.

இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கும் வருணன் படத்தில் ஹரிபிரியா ஒப்பந்தமாகியுள்ளார். யாக்கை பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

ஹரிபிரியாவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்