புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம்

புதுச்சேரி,

புதுச்சேரி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் அப்பணிகள் முடியும் வரை புதுச்சேரி – கடலூர் சாலையில் உள்ள எ.எப்.டி மைதானத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலூர் சாலையில் உள்ள தியாகி வெங்கடசுப்பா ரெட்டியார் சிலையிலிருந்து ரெயில்வே கேட் வரை சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழித்தட பேருந்துகளும் நாளை முதல் எ.எப்.டி மைதானத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்