புனேவில் மொபைல் ஹாட்ஸ்பாட் பகிர மறுத்த நபர் குத்திக்கொலை

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ஹதப்சர் பகுதியில், நிதி நிறுவன ஏஜெண்ட் ராமசந்திர குல்கர்னி(47) என்ற நபரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் மொபைல் ஹாட்ஸ்பாட்டை பகிருமாறு கேட்டுள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர்களுக்கு ஹாட்ஸ்பாட்டை பகிர ராமசந்திர குல்கர்னி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின்போது அந்த இளைஞர்கள் ராமசந்திர குல்கர்னியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் மயூர் மோசாலே(19) மற்றும் மைனர் சிறுவர்கள் 3 பேரை கைது செய்தனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்