புரட்டிப்போட்ட வெள்ளம்.. சந்திரபாபு நாயுடு கொடுத்த வாக்குறுதி இதுதான்

ஆந்திராவை புரட்டிப்போட்ட வெள்ளம்.. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கொடுத்த வாக்குறுதி இதுதான்!

ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திரப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இதனிடையே கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விஜயவாடா மாவட்டத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

புத்தமேரு என்ற பகுதியில் மழைவெள்ளம் தேங்கிய பகுதிகளையும், வடிகால்களையும் ஹெலிகாப்டரில் இருந்தபடியே சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். கிருஷ்ணா நதி கடலில் கலக்கும் முகத்துவார பகுதியையும் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
இனி பாலியல் வன்கொடுமை கொலைகளுக்கு மரண தண்டனை? – குடியரசு தலைவருக்கு மசோதா அனுப்பி வைப்பு!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, கிருஷ்ணா நதியின் அருகே அதிகளவில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்தது என்றும் கூறினார். நீங்கள் தவறுகளை செய்துவிட்டு இப்போது எங்களை குறை சொல்கிறீர்கள் என எதிர்கட்சிகளிடம் கேள்வி எழுப்பினார்.

சைவ உணவு உண்பவர்களுக்கு புரதம் நிறைந்த 10 உணவுகள்.!
மேலும் செய்திகள்…

மேலும் பேரிடர் நேரத்தை ஒரு நெருக்கடியாக பார்க்காமல் மக்களுக்கு பணி செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக பார்ப்பதாக குறிப்பிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தான் மாநிலத்திலும், மத்தியிலும் நடப்பதாக தெரிவித்த அவர், மத்திய அரசுடன் இணைந்து, மாநில மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று கூறினார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Andhra Pradesh
,
N Chandrababu Naidu

Related posts

வெள்ளி விழா, பொன் விழா, பவள விழாக்களைபோல நூற்றாண்டு விழாவிலும் திமுக ஆட்சியில் இருக்கும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

நாம் தமிழர் கட்சிக்கு தலைமை வகிக்கும் தகுதியை முற்றிலும் இழந்துவிட்டார் சீமான்: திருச்சியில் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் மிலாடி நபி பண்டிகை கோலாகலம்