புரி ஜெகன்நாதர் கோயில் கருவூலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால சிலைகள்..

புரி ஜெகன்நாதர் கோயில் கருவூலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால சிலைகள்… அடுத்தடுத்து வரும் ஆச்சரிய தகவல்கள்!

உலக புகழ்பெற்ற புரி ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய பொக்கிஷ அறையில் என்னதான் உள்ளது என பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. பிரசித்த பெற்ற ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோயில், சர்ச்சை காரணங்களுக்கு அண்மைக்காலமாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தேர்தல் பரப்புரையின் போது புரியில் பேசிய பிரதமர் மோடி, ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறைகளின் தொலைந்து போன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டதாக பேசியிருந்தார்.

விளம்பரம்

முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி.கார்த்திகேயன் பாண்டியனை குறிப்பிடும் வகையில் பேசியது, அரசியல் களத்தில் மிகப்பெரிய பிரளயத்தை உண்டாக்கியது. பிரதமரின் இந்தப் பேச்சிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. ஒடிசாவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் அளவுக்கு கோயிலின் கருவூலத்தை திறப்பதும் அங்கம் வகித்திருந்தது.

இந்தப் பின்னணியில்தான், 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புரி ஜெகன்நாதர் கோயிலின் கருவூலமான ரத்னா பந்தர் எனப்படும் பொக்கிஷ அறை 46 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது. இப்புராதனக் கோயிலில் தரைப்பகுதிக்கு அடியில் பொக்கிஷ அறை உள்ளது. இதில், 128.38 கிலோ தங்கம், 221.53 கிலோ வெள்ளி ஆபரணங்கள் மற்றும் விலையுயர்ந்த ரத்னங்கள், விலைமதிப்பற்ற உலோகங்களால் செய்யப்பட்ட பல பழங்கால சிலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆபரணங்கள் ஜெகன்நாதரின் ரத யாத்திரை போன்ற விசேஷ நாட்களில் சிலைகளை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 46 ஆண்டுகளாக பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை.

விளம்பரம்

கடைசியாக 1978ஆம் ஆண்டு மே 13 முதல் ஜூலை 13ஆம் தேதி வரை ரத்னா பந்தர் எனப்படும் பொக்கிஷ அறை திறக்கப்பட்டது. இதனிடையே, 1985-ல் பொக்கிஷ அறையை தொல்லியல் துறை குழு ஆய்வு செய்ய சென்ற போது, நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறி திரும்பிவிட்டது. இந்த நிலையில் 2018ஆம் ஆண்டில் பொக்கிஷ அறையின் சாவி காணாமல் போனதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான், ஒடிசாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பொக்கிஷ அறையை திறக்க அனுமதி அளித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இங்குள்ள ஆபரணங்களை கணக்கிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விஷ்வநாத் ராத் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

விளம்பரம்

Also Read |
பூமியின் மிகத் தொலைதூர இடம் எது தெரியுமா? மர்மங்கள் புதைந்திருக்கும் ‘பாயிண்ட் நெமோ’-க்கு சென்ற ஒரே ஒரு நபர்!

இதுகுறித்து ஜெகன்நாதர் கோயில் நிர்வாகத் தலைவர் அரபிந்தா பதீ கூறுகையில், ரத்னா பந்தர் கணக்கீட்டுப் பணி முழுவதும் பதிவு செய்யப்படும் என்றும் அவை ரகசியமாக வைக்கப்படும் எனவும் கூறினார். இவை மட்டுமின்றி, அரசு அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் இந்த பொக்கிஷ அறையை திறந்தபோது கருவூலத்தின் உள் அறையில் விலைமதிப்பற்ற உலோகங்களால் செய்யப்பட்ட பல பழங்கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். உட்புற அறையில் லாக்கெட்டுகள், வெள்ளி சிம்மாசனங்கள், வளையல்கள், வைரம் மற்றும் முத்துக்கள் கொண்ட கழுத்தணிகள், தங்கம் பதித்த மயூர் சந்திரிகா, தங்கம் மற்றும் புலி நகங்கள், தங்க மாலைகள், தங்க சக்கரங்கள், தங்க மலர்கள் மற்றும் தங்க மோஹர் (நாணயங்கள்) உள்ளிட்ட பல்வேறு மதிப்புமிக்க பொருட்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Odisha
,
Puri Jagannath temple
,
Trending

Related posts

கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றமா? – அலறியடித்து ஓடும் அரசு ஊழியர்கள்

“அவரது உழைப்பும், சேவையும் என்றென்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்” – பாப்பம்மாளுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு கட்டணத்தை உரிய காலத்துக்குள் செலுத்துவோம்: கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி தகவல்