புலிகளை விஷம் வைத்துக் கொன்றதாக 3 வடமாநில தொழிலாளர்கள் கைது

புலிகள் இறந்து கிடந்த விவகாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதிர்காடு வனச்சரகத்திற்குட்பட்ட ஒரு தனியார் தேயிலை தோட்டத்திற்குள் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று, இறந்த புலிகளை பார்வையிட்டனர்.

அப்போது அந்தப்பகுதியில் சோதனை செய்த போது புலிகள் இறந்து கிடந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் காட்டுப்பன்றி இறந்து கிடந்தது. மேலும் அங்கு புலிகளின் கால் தடங்கள் பதிவாகி இருந்தன. அப்போது காட்டுப்பன்றி விஷம் தின்று இறந்ததும், அதனை தின்று புலிகள் இறந்ததும் தெரியவந்தது. புலிகள் மற்றும் காட்டுபன்றியின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

புலிகள் இறந்து கிடந்தது தொடர்பாக அந்தப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில், காட்டுப்பன்றியை கொல்ல வனப்பகுதியில் விஷம் வைத்தது மேற்கு வங்கத்தை சேர்ந்த சூரியநாத் பராக் (வயது 35), அமன் கொயாலா (27), சுபித்நின்வார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Related posts

அமித் ஷா மீது குற்றச்சாட்டா? கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன்

Pune: MVA Backs Independent Bapu Bhegade, Fields No Candidate In Maval Assembly Constituency Against NCP’s Incumbent MLA Sunil Shelke

Video: Man Assaults Woman In Greater Noida, Pulls Her Hair And Hits Her As Residents Step In; Police Respond