புல்லட் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து! தொழிலாளர்கள் கதி என்ன?

குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் புல்லட் ரயில் வழித்தடப் பாதைக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று(நவ. 5) மாலை எதிர்பாராதவிதமாக காங்கிரீட் தொகுதிகள் கீழே சரிந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது.

மஹி ஆற்றங்கரைப் பகுதியில் நடைபெற்ற கட்டுமானப் பணியின்போது, மேலேயிருந்து காங்கிரீட்கல் துண்டாக உடைந்து அப்போது கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிலர் மீது விழுந்துள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயனைப்புத் துறையினர் காங்கிரீட் கற்களை அகற்றி உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிரேன் மூலம் மீட்புப் பணி நடைபெற்று வருவதாகவும், விபத்து நிகழ்ந்த இடத்தில் 3 தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகவும் தேசிய அதிவிரைவு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஏவுகணை பரிசோதனை: வட கொரியாவுக்கு ஜப்பான், அமெரிக்கா கண்டனம்!

ஜார்க்கண்ட்டில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சத்துக்கான காப்பீடு -இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சியினால் மன உளைச்சல்..! நடிப்பு எதிர்பாராதது! மனம் திறந்த பாடகர் அசல் கோலார்!