புல்வாமா தாக்குதல் குற்றவாளி மாரடைப்பால் உயிரிழப்பு!

நாட்டை உலுக்கிய புல்வாமா தாக்குதலில் பிடிபட்ட குற்றவாளி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதியன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த பாதுகாப்பு கான்வாய் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்து 8 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தியதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் 19 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் ஒருவரான ஹாஜிபல் கிராமத்தைச் சேர்ந்த குற்றவாளி பிலால் அகமது குச்சே (32), கிஷ்த்வார் மாவட்டச் சிறையில் இருந்தபோது உடல்நலக்குறைவால் கடந்த செப். 17 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நாட்டை உலுக்கிய பத்லாபூர் வன்கொடுமை: குற்றவாளி என்கவுன்டரில் கொல்லப்பட்டது எப்படி?

இந்த நிலையில், குற்றவாளி பிலால் அகமது குச்சே நேற்று (செப். 23) இரவு மாரடைப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிலால் மற்றும் 18 மற்ற குற்றவாளிகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பால் ஆகஸ்ட் 25, 2020 அன்று இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 7 பேரில் அவரும் ஒருவர்.

இதில், பிலால் மற்றும் ஷாகீர் பஷீர், இன்ஷா ஜான் மற்றும் பீர் தாரிக் அகமது ஷா ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு தங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுத்து உதவி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.

ரயில்கள் மீது கற்களை வீசித் தாக்குதல்… பயணிகள் காயம்!

மேலும், 2 பாகிஸ்தானியர்கள் உள்பட 6 பயங்கரவாதிகள் வெவ்வேறு என்கவுன்டர்களில் கொல்லப்பட்டு, மீதமுள்ள ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அசார் உள்பட 6 பேர் தலைமறைவாக உள்ளனர்.

புல்வாமா தாக்குதல் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பின் தலைமையால் நன்கு திட்டமிடப்பட்ட சதித் திட்டத்தின் விளைவாக நடைபெற்றதாக தேசிய புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!