‘புஷ்பா 2’ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட ஹன்சிகா…வைரலாகும் வீடியோ!

‘புஷ்பா 2’ படத்தில் இருந்து வெளியாகி இருக்கும் சாமி பாடலின் ஹூக் ஸ்டெப்பில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடனம் ஆடியிருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

சென்னை,

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன. இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், படத்திற்கான புரோமோஷன் வேலைகளையும் படக்குழு தொடங்கியுள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வெளியான 'சாமி…' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்தப் பாடலின் ஹூக் ஸ்டெப்புக்கு ரசிகர்கள் பலரும் நடனம் ஆடி வீடியோ பகிர்ந்து வந்தனர். இந்த டிரெண்டில் தற்போது ஹன்சிகாவும் இணைந்துள்ளார். ராஷ்மிகாவின் சாமி ஹூக் ஸ்டெப்புக்கு பாவாடை, தாவணியில் நடனம் ஆடி அசத்தி இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் 'புஷ்பா 2' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தால் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Hansika Motwani (@ihansika)

'புஷ்பா 2' படத்தின் முதல் பாகம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகம் வசூல் செய்ததால் இரண்டாம் பாகத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!